யாழ். குடாநாட்டு பிரதேசங்களிலும் இன்று கடும் மழை!
யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்று கடும் மழை
பெய்துள்ளது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இன்று காலை 08.15 மணி முதல் 10 மணி வரையும், முற்பகல்11 மணியிலிருந்து சுமார் அரை மணித்தியாலங்கள் கடும் மழை பெய்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மப்பும் மந்தாரமுமான காலநிலை நீடித்தது.
மழை காரணமாக யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும், வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது. வலிகாமம் பகுதியில் இன்று இரவு மீண்டும் கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, யாழ். குடாநாட்டில் காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் போதியளவு மழையில்லாத காரணத்தால் காலபோகச் செய்கை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக மழை வேண்டி விவசாயிகள் ஆலயங்களில் பொங்கல் வழிபாடுகளைக் கடந்த சில தினங்களாக முன்னெடுத்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
6:06:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:06:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: