Top Ad unit 728 × 90

திருமண சாட்சியாக கரடியை அழைத்த திருமண தம்பதி!

பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. சாட்சியாக இருப்பவருக்கு குறைந்தபட்சம் 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.

இந்த சட்டத்தை சற்று வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளனர் ரஷ்ய தம்பதி டெனிஸ் மற்றும் நெல்யா. தங்களது திருமண சாட்சிக்கு 18 வயது நிரம்பிய மனிதரை அழைக்காமல் 18 வயது நிறைவடைந்துள்ள பழுப்பு நிற கரடியை அழைத்துள்ளனர். எனவே கரடியின் முன்னிலையில் அவர்களது திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மணப்பெண் நெல்யா, ஸ்டீபன் என்கிற பழுப்பு நிற கரடியை வெகுநாட்களாக தங்களுக்கு தெரியும் என்றும் எனவே ஸ்டீபன் முன்பே தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருந்ததாக கூறியுள்ளார்.

தற்போது ஸ்டீபன் முன் தங்களது திருமணம் இனிதே நடைபெற்றுள்ளதால் நீண்ட கால கனவு தற்போது நினைவாகி விட்டதாக மகிழ்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் அதாவது கரடி சற்று பெரிய அளவில் இருந்ததால் சிறிது பயம் இருந்ததாகவும், நிஜ கரடியை கட்டி அணைத்தது மிகப் பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியதாகவும் நெல்யா கூறியுள்ளார்.

ஸ்டீபன் கரடிக்கு தற்போது 22- வயதாகிறது. வீட்டில் டிவி பார்ப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என மனிதன் செய்யும் வேலைகளையும் இந்த ஸ்டீபன் கரடி அருமையாக செய்து முடிக்குமாம். தற்போது திருமணத்தையும் நடத்தி வைத்து மணமக்களையும் ஆசீர்வதித்துள்ளது.
திருமண சாட்சியாக கரடியை அழைத்த திருமண தம்பதி! Reviewed by Unknown on 6:13:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.