ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர்:ரயிலால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்,வைரலாகும் (வீடியோ)
மராட்டிய மாநிலம் மும்பையில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் மரைன் லைன்ஸ் பகுதியில் குறித்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் பொலிஸ் தரப்பில் இருந்து குறித்த சம்பவத்தை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை குறித்த நபரை மீடகவோ அல்லது அவருக்கு நேர்ந்தது என்ன என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட சம்பவம் நிகழந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் அதை வீடியோவாக பதிந்து தற்போது இணையத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த வீடியோ பதிவு தற்போது சமூகவலைத்தளங்கள் உள்ளிட்டவையில் அதிகம் பேர் பகிர்ந்துகொண்டு வைரலாகியுள்ளது.
சிவப்பு மற்றும் நீல வண்ணத்தில் உடை அணிந்துள்ள அந்த இளைஞர் நடைமேடையில் இருந்து ரயில் கிளம்பியதும் திடீரென்று வெளியே தொங்குகிறார். காதுக்குள் சொருகியபடி ஹெட்போன் ஒன்றும் காணப்படுகிறது. அடுத்த நொடியில் அந்த இளைஞர் மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்படுகிறார். அப்போது அவரது நண்பர் கூட்டமாக கத்தும் சத்தமும் கேட்கிறது.
குறித்த சம்பவத்தில் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது மட்டுமல்ல, இளைஞர் ஒருவர் மாயமானதாகவும் மும்பை நகரில் உள்ள காவல் நிலையத்தில் இதுவரை புகார் எதுவும் வரவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

Reviewed by Unknown
on
6:32:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:32:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: