Top Ad unit 728 × 90

உங்களுடன் பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா? எப்படி தெரிந்து கொள்வது?

பொதுவாக ஆண்கள் அனைவரும் பெண்களோடு சகஜமாக பழகுவார்கள். சகஜமாக பழகும் ஆண்கள், பெண்களின் பழக்கவழக்கங்களை கண்டு அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது காதாலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால் என்ன இவ்வளவு நாட்கள் சகஜமாக பழகிவிட்டோமே இப்போது சென்று காதல் சொன்னால் அவள் தன்னை தவறாக நினைத்துவிடுவாளே என்று பல ஆண்கள் அஞ்சுகின்றனர்.

இனிமேல் அந்த பயம் வேண்டாம். நீங்கள் காதலை சொல்லாமலே அவர் உங்களை காதலிக்கிறாரா, இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

    பெண்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது அரிது. அப்படி ஒரு பெண் அடிக்கடி மெசேஜ் அனுப்பி, சாப்பிட்டீர்களா என நலம் விசாரித்தால் அவர் உங்கள் மீது ஒரு வித அன்பு வைத்துள்ளார்.
  •  மெசேஜ்க்கு ஏன் பதிலளிக்கவில்லை என அந்த பெண் கேட்டால், வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன் என கூறிப்பாருங்கள். அதற்கு எதிரில் உள்ள பெண் சோகமடைந்தால் அவர் உங்கள் மேல் காதல் கொண்டுள்ளார் என்பது அர்த்தம். அதுவே சற்று அலட்டிக்கொள்ளாமல் யார் அந்த பெண், அவங்க எப்படின்னு கேட்க ஆரம்பித்தால் அவர் தோழியாக பழகுகிறார் என தெரிந்துகொள்ளலாம்.
     
  • பெரும்பாலும் தோழிகள், மற்றவர்கள் பற்றியும், அலுவலகத்தில் நடந்தது குறித்தும் பேசுவார்கள். ஆனால் காதலியோ அதையும் தாண்டி, தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுவதுமாக பகிர்ந்துகொள்வார்.
     
  • ஒரு பெண் ஒருவரை ஓரிரு நாட்கள் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், அவரை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், மறு நாள் தொடர்பு கொண்டு அளவுக்கு மீறிய அன்பாக பேசி, ஏன் அந்த நாட்களில் போன் எடுக்கவில்லை என கேள்வி கேட்டு அறிந்து கொள்ள ஆசைப்படுவார். அப்படி அதீத அன்பாக இருப்பவர் காதலிக்கிறார் என்று தான் அர்த்தம்.
Image result for how to know if a girl likes or love you
  •  மகிழ்ச்சியான தருணங்களில் நண்பர்களிடம் நேரத்தை செலவழிக்காமல், உங்களுடன் செலவிட்டால் அவரின் நட்பு காதலாக மாற வாய்ப்புள்ளது.

    நீங்கள் சோகமாக இருந்தால், உங்களை சோகத்திலிருந்து வெளிக்கொண்டுவர அடுத்தடுத்து முயற்சி செய்தால், அவர் உங்கள் மேல் காதலில் விழுந்து விட்டார் என நம்பலாம்.
     
  • ஒரு பெண் தன்னை காதலிப்பதாக உணர்ந்தால், அவரிடம் வேண்டுமென்றே அந்த பெண் அழகாக உள்ளார். இந்த பெண் தன்னை கவர முயற்சிக்கிறார் என புருடா விடுங்கள். உடனே கடுப்பாகி கிளம்பினால் அவர் காதலிப்பது உறுதி.
உங்களுடன் பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா? எப்படி தெரிந்து கொள்வது? Reviewed by Unknown on 7:10:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.