ரொறன்ரோ, றயர்சன் பல்கலைக்கழக மாவீரர் நாள் வணக்க நிகழ்வு!
ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி வரும் மாவீரர் நாளுக்கு முன்னதாக கனடிய பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் மாவீரர் வணக்க நிகழ்வுகள் அங்குள்ள தமிழ் மாணவர்களால் நடத்தப்படுவது வழக்கம். இதனை கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கமைத்து வருகின்றது.
அந்த வகையில், நேற்று, புதன்கிழமை றயர்சன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் வணக்க நிகழ்வில், மாவீரர்கள் பற்றிய எழுச்சி உரைகள், கவிதைகள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
எதிர்வரும் 25ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கனடா தமிழ் இளையோர் அமைப்பு அனைத்து கனடிய தமிழ் மாணவர்களையும் இணைத்து நடத்தும் ‘மாவீரர் வார தொடக்க நிகழ்வு’ நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரொறன்ரோ, றயர்சன் பல்கலைக்கழக மாவீரர் நாள் வணக்க நிகழ்வு!
Reviewed by Unknown
on
1:21:00 AM
Rating:
Reviewed by Unknown
on
1:21:00 AM
Rating:



கருத்துகள் இல்லை: