Top Ad unit 728 × 90

மணிக்கு ரூ.40,000 கட்டணத்தில் காதலியை ஆபாச வலைதளத்தில் விற்ற பிரித்தானிய பொலிஸ்க்காரர்!

பிரித்தானியாவில் சசெக்ஸ் காவல்துறையில் பணியாற்றிவரும் பொலிஸ்காரர் ஒருவர் மணிக்கு ரூ.40,000 கேட்டு காதலியை ஆபாச வலைதளத்தில் வாடகைக்கு விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசெக்ஸ் காவல்துறையில் பணியாற்றிவருபவர் 41 வயதான டானியல் மோசஸ். இவரே தமது காதலியான 38 வயது டிரேசி பெர்ரிமென் என்பவரை ஆபாச தளத்தில் வாடகைக்கு விட்டவர்.

காவலர் மோசஸ் குறித்த புகைப்படம் ஒன்று ஆபாச வலைத்தளம் ஒன்றில் விளம்பரமாக வந்துள்ளதை சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் சசெக்ஸ் பொலிசார் மறைமுக விசாரணையை துவங்கியுள்ளனர்.

இதில் காவலர் ஒருவரே குறித்த நபரை தொடர்பு கொண்டு அரை மணி நேரம் உல்லாசமாக இருக்க கட்டணம் செலுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்த பொலிசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் குறித்த ஆபாச வலைதளத்தில் மணிக்கு 210 பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.39,687.05) என்ற கட்டணத்தில் பாலியல் சேவை வழங்கி வருவதாகவும், விரும்பும் நபர்கள் கட்டாயம் சேவையை பெற வேண்டும் என அவரது காதலி டிரேசியின் வார்த்தைகளுடன் விளம்பரம் செய்துள்ளனர்.

விளம்பரங்களில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கில் பவுண்டு குறித்த தம்பதி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் காவலர் மோசஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட சசெக்ஸ் காவல்துறை அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன் உரிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
மணிக்கு ரூ.40,000 கட்டணத்தில் காதலியை ஆபாச வலைதளத்தில் விற்ற பிரித்தானிய பொலிஸ்க்காரர்! Reviewed by Unknown on 7:01:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.