Top Ad unit 728 × 90

மோடி - ராகுலின் அஞ்சலி செயற்பாட்டால் கடுப்பான இந்தியர்கள்!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் செயற்பாடுகள் குறித்து சமூக வலையதளமான டுவிட்டரில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டில்லியிலிருந்து இந்தியப் பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது அழுதுகொண்டிருந்த தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்து தேற்றினார். அந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.

இதேவேளை, ஜெயலலிதாவின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு சந்தர்ப்பத்தில் அருகிலிருந்தவருடன் சிரித்துக்கொண்டு உரையாடும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.

இந்த இரு புகைப்படங்கள் குறித்து சமுக வலைதளமான டுவிட்டரில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக்,

வித்தியாசம் “ஒரே இடத்தில் இரு தலைவர்கள்” நீங்கள் இந்த வித்தியாசத்தை உணருகின்றீர்களா என்றவாறு கருத்தொன்றையும் பதிவிட்டுள்ளார். அத்துடன், ஜெயலலிதாவுக்கு இரங்களையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் சிலரும் இந்த இரு புகைப்படங்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றதையும் காணக்கூடியதாக உள்ளது.
மோடி - ராகுலின் அஞ்சலி செயற்பாட்டால் கடுப்பான இந்தியர்கள்! Reviewed by Unknown on 4:10:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.