பேருந்தில் அனாதரவாக நின்ற பிள்ளைகள் - ஹட்டன் பொலிஸார் மீட்பு..
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் வந்த மூன்று சிறார்களை ஹட்டன் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவனை நேற்று பிற்பகல் 4 மணியளவில் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவானா தோட்டத்தில் வசித்து வரும் இந்த சிறார்களை கொழும்பில் வைத்து அவர்களது தந்தை பேருந்தில் ஏற்றியுள்ளதுடன் அவர்களுக்கு உணவை வாங்கி வருவதாக கூறி பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார்.
இதன் பின்னர் பிள்ளைகளின் தந்தை ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதுடன் தான் பிள்ளைகளுக்கு உணவு வாங்கி வர சென்றிருந்த நேரம் பேருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இதனால், தான் வரும் வரை பிள்ளைகளை பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்குமாறும் கோரியதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் கூறியுள்ளார்.
பிள்ளைகளது தந்தையின் தொலைபேசி செயலிழந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளின் தாய் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
பாதுகாப்பற்ற நிலைமையில் இருக்கும் இந்த பிள்ளைகளை ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஊடாக பொலிஸார் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Reviewed by Unknown
on
5:16:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:16:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: