Top Ad unit 728 × 90

வவுனியா மக்களுக்கு ஓர் எச்சரிக்கை-விரைவாக பகிருங்கள்!

வவுனியாவில் நேற்றிலிருந்து பெய்துவரும் கடும் மழை மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக இவ்வாறான காலநிலையினால் பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் குறைந்து காணப்படுகின்றது.

வியாபார நிலையங்களிலும் பொது சந்தைகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்தளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடும் குளிருடனான காலநிலையினால் பெரியவர்கள் மறறும் சிறுவர்கள் குழந்தைகள் அதிகம் பாதிப்புற்றால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதியாகுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 காலநிலையினை தாங்கக்கூடியவாறான உடைகளை அணிந்துக் கொள்ளும் அதேவேளை, மக்கள் மிகவும் பாதுகாப்பாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

பல்வேறு நோய்களுடன் தொடர்புடையவர்கள் எப்போதும் சூடான நீரை மாத்திரம் அருந்தும் அதேவேளை, இக்கால நிலை தொடர்ந்து நீடிக்குமானால் மேலும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் வவுனியா வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மக்களுக்கு ஓர் எச்சரிக்கை-விரைவாக பகிருங்கள்! Reviewed by Unknown on 4:55:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.