முகமாலை காணிகள் முழுவதும் மக்கள் வசம்!
இந்தப் பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02)இடம்பெற்றது.
இந்திராபுரம் மற்றும் முகமாலை உள்ளிட்ட பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான 1800 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் விடுவிக்கப்படும் காணிகள், காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமாலை காணிகள் முழுவதும் மக்கள் வசம்!
Reviewed by Unknown
on
9:37:00 PM
Rating:
Reviewed by Unknown
on
9:37:00 PM
Rating:


கருத்துகள் இல்லை: