முல்லைத்தீவு பெருங்காட்டுக்குள் மர்ம மனிதர்கள்.. பீதியில் மக்கள்!
முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதிகளில் மர்ம மனிதர்கள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டுதல் மற்றும் மது உற்பத்தி சாலைகளை இயக்குவதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சட்டவிரோத செயற்பாடுகள் சிலவற்றை முல்வைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸ்பிரிவினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
குற்றத்தடயப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் சம்பவ இடங்களில் குற்ற நபர்களை கைது செய்தது மிகக் குறைவாக காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பெருங்காட்டுப் பகுதிகளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெருங்காட்டுப் பகுதிகள் இராணுவ பிரதான முகங்கள் அமைந்திருக்கின்றன.
ஆனால் அவை பாதுகாப்பு வலயங்களாக அமைத்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் இவ்வாறு தனி மனிதர்களாக காட்டுப்பகுதிகளுக்கு செல்வதில்லை என்று இராணுவக் கட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குறித்த மர்ம மனிதர்கள் யார் அவர்களின் நடவடிக்கைகள் என்ன? என்பதே பொதுமக்கள் மத்தியில் அச்சத்துடன் எழும் கேள்வியாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
4:43:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:43:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: