Top Ad unit 728 × 90

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை ஆட்டைய போட்டது யார் நடந்தது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை. கே.பியின் 600 வங்கிக்கணக்குகளுக்கும் 5 கப்பல்களுக்கும் என்ன நடந்தது என்றும் அவர் வினவியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு சர்வதேச வர்த்தக அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர் முடிவடைந்தப் பின்னர் அரசியல் தேவைக்காகவே இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். நாட்டுக்காக சேவையாற்றிய முக்கிய இராணுவ அதிகாரிகள் கழற்றிவிடப்பட்டனர்.

இதனால் பலர் குடும்பத்தோடு வெளிநாடுசென்று வாழ்ந்து வரும் நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களை அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பயன் படுத்தப்பட்டனர்.

நாம் முழு இராணுவத்தையும் குறைகூறவில்லை. இந்த இராணுவத்தில் ஒருகுழுவை உருவாக்கிக் கொண்டே கடத்தல், கொலை செய்தல், அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகள் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்டன.

எனவே, ஒட்டுமொத்த இராணுவத்தின் நன்மதிப்பையும் காக்க வேண்டுமெனில் குறித்த குழுவை கைதுசெய்து சட்ட நவடிக்கை எடுக்கவேண்டும். அந்த குழு தொடர்பான தகவல்களும் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

அதேவேளை, போர் முடிவுற்றபோது பெருமளவு தங்கம் மீட்கப்பட்டது. புலிகளின் வங்கியிலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தில் 45 கிலோ கிராம் மாயமாகியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியானால் கைப்பற்றப்பட்ட தங்கத்துக்கு என்ன நடந்தது? கே.பியின் 600 வங்கிக்கணக்குகளும், 5 கப்பல்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன என்று அரச ஊடகம் செய்திவெளியிட்டது.

அப்போது ஊடகப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தான் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். எனவே, மேற்படி வங்கிக் கணக்குகளுக்கும், கப்பல்களுக்கும் என்ன நடந்தது? இவை குறித்து மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்
விடுதலைப் புலிகளின் சொத்துக்களை ஆட்டைய போட்டது யார் நடந்தது? Reviewed by Unknown on 9:02:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.