கல்முனை கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு! சுனாமிக்கான அறிகுறியா..?
கல்முனையில் கடல் நீர் 100 மீற்றர் அளவில் ஊருக்குள் வந்தமையால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் அலறிக் கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர்.
இன்று(11) அதிகாலை 3 மணியளவில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை போன்ற இடங்களில் கடற் கரையிலிருந்து 100 மீற்றர் தூரம் குடிமனைப் பகுதிக்குள் கடல் வந்துள்ளது.
கல்முனை சுனாமி நினைவுத் தூபி பகுதியையும் தாண்டி ஊருக்குள் கடல் நீர் வந்துள்ளதாக அப்பகுதி சமுக சேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
கல்முனை கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு! சுனாமிக்கான அறிகுறியா..?
Reviewed by Unknown
on
6:39:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPGGx0IXTIWeln8dmLleDF64aEX6lO9HSeUM4vgXkagnFojV0GTKhp23zI1UjJpCBUmj7SHjkt-8LfraSFtVjFpi7T0J9IicdP5gNt1XZg0gh6WK29OX2yzM0pm3t6CXaQmKj-gLUnMWnI/s72-c/ice_screenshot_20161212-080615.png)
கருத்துகள் இல்லை: