திருகோணமலையில் அடையாளம் தெரியாத நபர்களால் தீயூட்டி எரிக்கப்ப தனியார் பேருந்து..!
திருகோணமலை 4ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த தனி நபருக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீயூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - திருகோணமலை சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்தானது உரிமையாளரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பேருந்தின் பின்புறச் சில்லில் மூட்டப்பட்ட தீயின் காரணமாகவே பேருந்தில் தீப்பற்றியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தானது தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீயூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - திருகோணமலை சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்தானது உரிமையாளரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பேருந்தின் பின்புறச் சில்லில் மூட்டப்பட்ட தீயின் காரணமாகவே பேருந்தில் தீப்பற்றியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தானது தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் அடையாளம் தெரியாத நபர்களால் தீயூட்டி எரிக்கப்ப தனியார் பேருந்து..!
Reviewed by Unknown
on
1:59:00 AM
Rating:
Reviewed by Unknown
on
1:59:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: