Top Ad unit 728 × 90

50 ஆயிரம் ரூபா தண்டபணம் சாரதிகளுக்கு சோதனை மேல் சோதனை!

போதைப் பொருள் பாவனையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படுவதாயின் போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட வேண்டும்.

இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சாரதிகளுக்கு ஏறபட்ட தூக்கம் காரணமாகவே, அண்மையில் அதிகளவான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், போதைப் பொருள் பாவனையுள்ளவர்கள், அதனைப் பயன்படுத்த தவறும் போதே அதிக தூக்கம் ஏற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, போதைப் பொருள் பழக்கமுள்ள சாரதிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்துக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
50 ஆயிரம் ரூபா தண்டபணம் சாரதிகளுக்கு சோதனை மேல் சோதனை! Reviewed by Unknown on 9:06:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.