Top Ad unit 728 × 90

இலங்கையில் இரட்டைக் கோபுரம்! பல வசதிகளுடன்...

இலங்கையில் World Export Centre என்ற பாரிய இரட்டை கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் பெரும்பாலான பல்வகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுமதியில் கூடுதல் வணிக மதிப்பு கொண்ட முன்னோடி வணிக கூட்டு நிறுவனமாக ஹேலிஸின் புதிய திட்டமாக இந்த “World Export Centre” இரட்டை கட்டட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரபலமான கட்டடக்கலையினை இலங்கையினுள் பிரபலப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படும் இந்த இரட்டை கட்டடம் தலா 55 மாடிகளை கொண்டுள்ளது.

இந்த கட்டடத்தில் 20000 ஊழியர்களுக்கு சேவை வசதி வழங்கப்படவுள்ளது. 2000 மோட்டார் வாகனங்கள் நிறுத்த கூடிய வகையில் வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற வசதிகளுக்காக 3 மாடிகளும் உள்ளடக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் இரட்டைக் கோபுரம்! பல வசதிகளுடன்... Reviewed by Unknown on 5:14:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.