Top Ad unit 728 × 90

கணவனை சித்ரவதை செய்து கொன்ற மனைவி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கனடா நாட்டில் கணவனை கொடூரமாக் சித்ரவதை செய்து கொலை செய்த மனைக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கனடாவில் உள்ள எட்மோண்டன் நகரில் Teck Hwang(56) மற்றும் Nyuk Hwang(55) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்த நிலையில், கணவனை மனைவி கொடூரமாக சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் திகதி தனது கணவன் சுயநினைவின்றி கிடப்பதாக மனைவி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்துச் சென்ற பொலிசார் கணவனை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாத காரணத்தால் 26-ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவரை இரும்புக் கம்பியில் கொடூரமாக தாக்கியதால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுப்படுத்தப்பட்டார்.

3 ஆண்டுகள் முடிவில் நேற்று முன் தினம் இவ்வழக்கின் இறுதி வாதம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, கணவனை பல ஆண்டுகளாக மனைவி சித்ரவதை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் ஏற்கனவே 3 வாரங்கள் சிறையில் இருந்துள்ளார்.

ஆனால், சம்பவம் நிகழ்ந்த அன்று மனைவி முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதால் அவரது கணவன் உயிரிழந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கணவனை சித்ரவதை செய்து கொன்ற மனைவி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Reviewed by Unknown on 6:27:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.