Top Ad unit 728 × 90

காதலனை கத்தியால் சரமாரியாக தாக்கிய காதலி: அதிர வைக்கும் காரணம்!

பிரித்தானியாவில் தனக்கான சிப்ஸ் முழுவதையும் தின்று தீர்த்த காதலனை கத்தியால் காதலி சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிளாக்பர்ன், லங்காஷயர் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. மார்கரட் கிளேடன் (34) என்பவர் சம்பவத்தன்று தமது காதலருடன் நண்பர் ஒருவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் தேநீர் மற்றும் வீட்டில் வறுத்த சிப்ஸ் ஆகியவை பரிமாறியுள்ளனர். இதில் இருவருக்குமான சிப்ஸ் மொத்தமும் கிளேடனின் காதலர் சைமன் தின்று தீர்த்ததாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த கிளேடன் சமையல் அறையில் இருந்த கத்தியை உருவி சைமனை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்ட நண்பர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பிளாக்பர்ன் குற்றவியல் நீதிமன்றம் கிளேடனுக்கு 26 வாரக்காலம் சிறை தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுவரை குறித்த தம்பதிகளுக்கு இடையே எந்தவித சண்டை சச்சரவுகள் எதுவும் நேர்ந்ததில்லை எனவும், இதுவே முதல் முறை எனவும், கிளேடனுக்காக வாதிட்ட வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கிளேடன் மீது புகார் தெரிவிக்க சைமன் மறுத்து வந்துள்ளது இருவருக்குமிடையே உள்ள உறவின் ஆழத்தை காட்டுவதாகவும், ஆனால் கிளேடன் வெறும் சிப்சை காரணம் காட்டி கத்தியால் தாக்கியதன் நிஜ காரணம் என்ன என்பது இதுவரை வெளிப்படித்தவில்லை என தாம் கருதுவதாக குறித்த வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
காதலனை கத்தியால் சரமாரியாக தாக்கிய காதலி: அதிர வைக்கும் காரணம்! Reviewed by Unknown on 4:44:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.