Top Ad unit 728 × 90

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து அஸ்வின் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி-யின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளாரான ரவிச்சந்திரன் அஸ்வின் 887 புள்ளிகளை தொடந்து தனது முதலிடத்தையும், ரவீந்திர ஜடேஜா 879 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அடுத்ததாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் 860 புள்ளிகளைப் பெறு மூன்றாவது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரரான ரபாடா 8 வது இடத்தையும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் 19 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் அவுஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இந்திய அணியின் அணித்தலைவரும், துடுப்பெடுத்தாடுவதில் ஏலியன் என்று புகழப்படும் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் விராட் கோஹ்லியை தவிர வேறு எவரும் இடம்பெறவில்லை.

இதையடுத்து, சிறந்த அணிகளின் தரவரிசையில், இந்தியா 120 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும் அவுஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து அஸ்வின் முதலிடத்தில் Reviewed by Unknown on 9:58:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.