Top Ad unit 728 × 90

தான் காதலியை கற்பழித்து வீடியோ எடுத்த காதலனுக்கு அதிரடி தண்டனை காட்டிய நீதிமன்றம்

அமெரிக்காவில் காதலியை கற்பழித்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள எஸ்சக்ஸ் நகரில் Atlanta Hammond(21) என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவங்களை தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதே நகரை சேர்ந்த இஸ்லாமியரான Halil Cetinkayali(30) என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளனர். இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பின்னர், நாட்கள் செல்ல தன்னுடைய காதலியை அவர் தொடர்ச்சியாக சித்ரவதை செய்து வந்துள்ளார். காதலியை அடிக்கும்போது ஏற்படும் காயங்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், காதலியை மிரட்டி அவரை கற்பழித்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் காதலி இணையத்தளத்தில் ஒரு தகவலை தேடியபோது அவருடைய காதலன் பொலிசாரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து நான் பிரிந்து செல்கிறேன் என காதலி கூறியபோது, ‘என்னை விட்டு சென்றால் இந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

இதனால் வேறு வழியில்லாத காரணத்தினால் அவருடன் இளம்பெண் கடுமையான சித்ரவதைகளை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால், காதலின் சித்ரவதை மிக மோசமானதை தொடர்ந்து ஒரு நாள் வீட்டை விட்டு தப்பிச் சென்று பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் முன்னாள் காதலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நபர் மீதான அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தான் காதலியை கற்பழித்து வீடியோ எடுத்த காதலனுக்கு அதிரடி தண்டனை காட்டிய நீதிமன்றம் Reviewed by Unknown on 5:30:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.