Top Ad unit 728 × 90

சாமி கும்பிடும்போது கண்களை மூடுகிறோமே அது சரியா? ஏன் அப்படி செய்யக்கூடாதென தெரியுமா?

பொதுவாக இந்து, இஸ்லாமிய, கிறித்துவ மதங்களைச் சார்ந்த எல்லோருமே அவரவருடைய கடவுளை வேண்டுகிறபோது, கண்களை மூடி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணிக்கும் அர்ப்பணிப்பு உணர்வு தோன்றுவதாக நம்புகிறார்கள். ஆன்மின நெறியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்த முயற்சி செய்வதற்கான முறையாகத் தான் கண்களை மூடிக்கொண்டு வழிபடுகிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே கடவுளை வழிபடும்போது கண்ணை மூடிக்கொண்டு தான் வழிபட வேண்டுமா? அப்படி வழிபடுவதால் என்ன நடக்கும்? ஆன்மிகத்தில் அதற்கும் சில காரணங்கள் உண்டு.
 கோயிலுக்குச் செல்பவர்கள் பல மணி நேரம் கூட நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். ஆனால் கருவறையைக் கண்டவுடன் இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு, உடனே கண்களை மூடிக்கொண்டு, எதிரில் இருக்கும் கடவுளை நேரில் பார்ப்பதை விட்டுவிட்டு மனக்கண்ணில் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதற்கு காரணம் தான் என்ன? ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

ஆனால் இப்படி செய்வது முற்றிலும் தவறான ஒரு வழிபாட்டு முறை.

மூலவரைப் பார்த்தவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் கடவுளின் மேல் வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

கடவுளின் அழகில் முழு மனதையும் முதலில் பறிகொடுக்க வேண்டும். கடவுளுக்கு உடுத்தியுள்ள ஆடை மற்றும் அணிகலன்களை ரசிக்க வேண்டும்.

கடவுள் அருள்புரியும் கோலத்தை நினைத்து பிரமிப்பு கொள்ளுங்கள்.

சில சமய்ஙகளில் நாம் கடவுளின் அருகில் சென்று பார்க்கும் தருணத்தில் அபிஷேகத்துக்காக திரை போட்டுவிடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்துக் கொண்டு நிற்கலாம்.

அதனால் கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே, இறைவா உன்னுடைய தரிசனம் எனக்கு சிறப்பாய் கிடைப்பதற்கு முதலில் அருள்புரிவாயாக… என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

உன்னுடைய கடைக்கண் பார்வையாவது என் மீது பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

நீ தான் என்னை வாழ வைக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. வேண்டாததை நீக்கிவிடு…  என்னுடைய உள்ளத்தையும் இல்லத்தையும் நீ தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும் போதாவது கண்களை கண்ணை மூடிக்கொண்டு வழிபடுவதை விட்டுவிட்டு கண்களைத் திறந்து, இறைவனின் திருக்கோலத்தை பார்த்துக் கொண்டே தரிசனம் செய்யுங்கள்.
சாமி கும்பிடும்போது கண்களை மூடுகிறோமே அது சரியா? ஏன் அப்படி செய்யக்கூடாதென தெரியுமா? Reviewed by Unknown on 3:21:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.