Top Ad unit 728 × 90

யாழ்.குடாநாட்டில் இன்று மின்சார தடை....

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பலவிடங்களிலும் இன்று
(08) காலை 08.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதவேளை, நாளை யாழ். ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து சத்திரச் சந்தி வரை, கந்தப்பசேகரம் வீதி, மகாத்மா காந்தி வீதி, முனீஸ்வரன் வீதி, கஸ்தூரியார் வீதி, ஆஸ்பத்திரி வீதிச் சந்தியிலிருந்து வின்சர் சந்தி வரை, மின்சார நிலைய வீதி, பெரிய கடை வீதி, திருநெல்வேலிப் பிரதேசம், கந்தர்மடம் சந்தி, இலுப்பையடி, பருத்தித் துறை வீதியில் பாரதியார் வீதிச் சந்தியிலிருந்து நாகவிகாரை வரை, ஆகிய பகுதிகளிலும் மின் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அன்னச் சத்திர வீதி, ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதியின் ஒருபகுதி, விக்ரோறியா வீதி, யாழ்ப்பாணம் முதலாம்,இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெருக்கள், புகையிரத நிலையப் பிரதேசம்,டாக்டர் சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை,ஊரி,களபூமி,காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபைப் பிரதேசம்,தோப்புக் காடு, காரைநகர் கடற்படை முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சார தடைசெய்யப்படவுள்ளது.

அத்துடன் காரைநகர் ஜெற்றி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இயற்கை விஞ்ஞானனப் பீடம், றக்கா வீதி பிரிட்டிஸ் கவுன்சில், நாவலர் வீதி தியாகி அறக் கொடை நிலையம், நொர்தேர்ன் சென்றல் பிரதேசம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆண்கள் விடுதி, டம்றோ-பலாலி வீதி,பீப்பிள் லீசிங் அன்பினான்ஸ் கம்பனி-ஸ்ரான்லி வீதி, Avnor பிறைவேற் லிமிட்டெட் போன்ற இடங்களாகும்.

மேலும் மக்கள் வங்கி, கிறீன் கிறாஸ் விடுதி, மொபிற்றல் பிறைவேற் லிமிட்டெட், லிங்கம் கிறீம் ஹவுஸ்,லங்கா ஒறீஸ் லீசிங் கம்பனி, பல்கலைக்கழக நான்கு மாடிகளைக் கொண்ட தங்குமிட வீதி, புகையிரத நிலையம்-யாழ்ப்பாணம், சிறி நதியா நகை மாளிகை,ராஜா பேச்சு ஆ, புஷ்பராகம்,தோப்பு, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு,தம்பாலை செல்வநாயகபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.குடாநாட்டில் இன்று மின்சார தடை.... Reviewed by Unknown on 6:06:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.