Top Ad unit 728 × 90

அலேர்ட் ஆறுமுகம்:புகைப்பிடித்தல் பாதிப்பு 30 ஆண்டுகள் மரபணுவில் நீடிக்கும்

புகைப்பிடித்தலின் பாதிப்பு மனிதனின் மரபணுவில் 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க தேசிய சுகாதார மைய விஞ்ஞானி ஸ்டெஃபனி ஜே. லண்டன் கூறியதாவது:

மரபணு செயல்படும் விதத்தைக் கட்டுப்படுத்தும் உயிரணுக்களில் ஒருவரின் புகைப்பழக்கம் குறித்த தகவல்கள் தெளிவாகப் பதிவாகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களுக்கென குறிப்பான மருத்துவ முறைகளைக் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 16,000 பேரின் ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர் மற்றும் புகைப்பழக்கத்தை கைவிட்டவரின் மரபணு, புகைப்பழக்கம் அறவே இல்லாதவரின் மரபணுவுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலானவர்களுக்குப் புகைப்பழக்கத்தை நிறுத்திய 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் மரபணு நிலை, புகைப்பழக்கம் இல்லாதவர்களைப் போன்ற நிலைக்குத் திரும்பி விடுகிறது. புகைப்பழக்கத்தை நிறுத்தி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனவர்களின் மரபணுக்கள், அப்பழக்கம் அறவே இல்லாதவர்களின் மரபணுக்களுடன் ஒத்து காணப்பட்டன.

ஆனால் சிலரது மரபணுக்கள் புகைப்பழக்கத்தை நிறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகும் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை என்று தெரியவந்தது.

இதன் காரணமாக அவர்களுக்குப் புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைப்பழக்கத்தின் தடம் மனிதனின் மரபணுவில் 30 ஆண்டு காலம் வரை நீடிப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

"கார்டியோவாஸ்குலர் ஜெனிடிக்ஸ்' என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி
உள்ளன.
அலேர்ட் ஆறுமுகம்:புகைப்பிடித்தல் பாதிப்பு 30 ஆண்டுகள் மரபணுவில் நீடிக்கும் Reviewed by Unknown on 6:58:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.