பெண்களே இதைப் படிங்க:கண்களால் ஆண்களை கவர்ந்திளுங்க!
கண்கள் அழகாக தோன்ற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இல்லாமலிருக்கும்! ஆனால் பாருங்கள் இந்த மாசு நிறைந்த சுற்றுச் சூழல் எப்போது பார்த்தாலும் அந்த ஆசையில் மண்ணள்ளிப் போட்டு விடுகிறது. வீட்டை விட்டு வெளியேறி நகரை ஒரு முறை வலம் வந்து மீண்டும் வீட்டுக்குப்போய் கண்ணாடி முன் நின்று பார்த்தால். தூசு, புகை, வெயில் சூடு என்று முகம் வறண்டு போவதோடு கண்கள் மட்டும் தனியாக கேப்டனிடம் க்ளோனிங் செய்யப்பட்டவை போல ரத்தச் சிவப்பாகி நம்மை மிரட்டுகின்றன. தலைமுடியிலும், கண் இமைமுடிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசுப் படலத்தைப் பார்த்தால் ஏதோ சித்தாள் வேலைக்குப் போய் வந்த எபெக்ட்! அதோடு எத்தனை முறை முகத்தையும் கண்களையும் நன்றாக தேய்த்து கழுவிய பின்னும் கண்ணில் மட்டும் உறுத்தல் தீராத வேதனை வேறு! இதில் கண்ணழகை பராமரிப்பது எப்படி என்று வருத்தமாகத் தான் இருக்கிறது இல்லையா?! அதற்காக சும்மா இருந்து விட முடியாதே...இதோ சில எளிய கண் பாதுகாப்பு பராமரிப்பு முறைகளைப் பற்றி இப்போது காண்போம்.
கண்களைப் பாதுகாக்க மிக எளிமையான வழிமுறை:
கண்களைப் பாதுகாக்க மிக எளிமையான வழிமுறை:
ஒவ்வொரு முறை வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் போதும் உடனே அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீர் நிரப்பி முகத்தை மட்டும் அதனுள் அமிழ்த்தி நீருக்குள் கண்களை நன்றாக விழித்துப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ந்த நீரில் நன்கு சுத்தம் செய்யப்படுவதோடு விழித்திரையிலிருக்கும் நரம்புகளும் குளிர்வடைகின்றன. இதனால் கண்களில் சூடு குறைந்து கண் எரிச்சலும் குறைகிறது.
பாரம்பரிய கண் பாதுகாப்பு வழிமுறை:
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பாட்டிகளும் அம்மாக்களும் சொல்லித் தந்த கண் பாதுகாப்பு முறை ஒன்றுண்டு. எளிமையானது என்பதால் இதையும் முயற்சி செய்து பார்க்கலாம். தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் அரை டீ ஸ்பூன் சுத்தமான நயம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு இரு கண்களிலும் விட்டு இமைகள் மற்றும் புருவங்களிலும் துளி விளக்கெண்ணை தடவிக் கொண்டு தூங்கலாம். இதனால் கண்கள் சூடு குறைவதோடு புருவம் மற்றும் இமை முடிகள் அடர்த்தியாக வளரவும் உதவும். கீழே உள்ள யூ டியூப் விடியோ பெண் பயன்படுத்தும் மிகச் சிறிய பிரஸ் கிடைத்தால் புருவங்கள் மற்றும் இமை முடிகளில் விளக்கெண்ணெய் தடவுவது இன்னும் சுகமான அனுபவமாக இருக்கும்.
விளக்கெண்ணெய் அதிக பிசு பிசுப்பான தன்மையுடன் இருப்பதாக நினைத்தால் அதற்கு மாற்றாக வாஸலின் பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் அல்லது வாஸலின் அப்ளை செய்ய பிரஸ் கிடைக்காத பட்சத்தில் கண்களுக்கு மஸ்காரா போட்டுக்கொள்ள வைத்திருக்கும் பிரஸ்ஸைக் கூட கழுவி விட்டு இதற்கும் பயன்படுத்தலாம்.
சில எளிய கண் பராமரிப்பு / பாதுகாப்புப் பயிற்சிகள்:
இவை தவிர அதிக சோர்வாக உணரும் தருணங்களில் எல்லாம் மெலிதான வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கப்பட்ட வெள்ளரி, கேரட் அல்லது உருளைக் கிழங்குத் துண்டுகளை 15 நிமிடங்கள் வரை கண் இமைகளின் மீது வைத்துக் கொண்டு நிம்மதியாக தலை சாய்த்து உட்காரலாம்.
கண்களைப் பொறுத்தவரை அதிகப்படியான மனச்சோர்வும், உடல் சோர்வும் முதலில் வெளிப்படும் இடம் கண்களாகவே இருக்கும் என்பதால் அப்படியான வேளைகளில் கண்களுக்கு நாம் கூடுதல் கவனம் அளிக்கத் தவறக் கூடாது. இல்லையேல் கண்கள் சோகையாக பொலிவிழந்தோ அல்லது சூட்டினால் ரத்தக் களறியாகவோ காட்சியளித்து நம்மை வெறுப்பில் ஆழ்த்தி விடும்.
அதிகாலையில் தூங்கி எழும் ஒவ்வொரு நாளுமே முதல் வேலையாக மறக்காமல் இமைகளைச் சுற்றி சுண்டு விரலால் மெலிதாக மசாஜ் செய்து விட்டு இளம் காலையின் முதல் சூரிய ஒளியை கண்களில் ஏந்திக் கொள்ளும் பழக்கத்தை குடும்பம் முழுமைக்கும் பழக்கப்படுத்துங்கள். கண்கள் அழகாவது மட்டுமல்ல கண் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கவும் இது உதவும்.

Reviewed by Unknown
on
1:53:00 AM
Rating:
கருத்துகள் இல்லை: