ரீ சேட்டில் சுருக்கிட்டு தற்கொலை: நீதவானுக்கு பெரும் குளப்பம்
புசல்லாவ இளைஞரின் மரணம் குறித்து நீதவான் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புசல்லாவ பொலிஸ் சிறைக் கூடத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பளை நீதவான் சாந்தனி மீகொட இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
25 அங்குலம் நீளமும் 18 அங்குலம் அகலமும் உடைய ரீ சேர்ட் ஒன்றின் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.
தூக்கிட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென நீதவான் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 30 வயதான நடராஜா ரவிராஜ் என்ற இளைஞரே உயிரிழந்திருந்தார்.
கம்பளை நீதிமன்றில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது ரவிச்சந்திரனின் தந்தை, சகோதரர் மற்றும் தயார் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அணிந்திருந்த டீ சேர்ட்டைக் கொண்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகியே கொல்லப்பட்டதாக ரவிச்சந்திரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரீ சேர்ட்டை வழக்கு பொருளாக வைக்குமாறும், எதிர்வரும் 30ம் திகதி சிறைக் கூடத்தை நேரில் பார்வையிட உள்ளதாகவும், வழக்கு விசாரணைகளை ஒக்ரோபர் மாதம் 18ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.

Reviewed by Unknown
on
6:38:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjeBbKa73T-0uHIWtJVKWT0ldJvozKjaPWVcZQ8ruRG5oKQ4w49IKmAlW8q4AHxw9sYGE6rvNPtsizBvmVVRgpHE9cZU4VdiEOFdBccsPmWLHvpZR_jPxXjH4s_y97F37TcVMaz01Ou4jc/s72-c/ice_screenshot_20160927-070716.png)
கருத்துகள் இல்லை: