தொண்டை வலி நீங்க சில ரிப்ஸ்
- இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும், மிளகையும் மென்று, தின்னலாம்.
- பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.
- உப்பு நீரால் கொப்பளிப்பது நல்லது.
- சூடான நீராகாரங்களைப் பருகுவதும் நல்ல பலனைத் தரும்.
- நீராவி பிடிப்பது (தொண்டையில் படும்படி) பிடிக்கலாம்.
- சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்துத் தொண்டையில், அதாவது கழுத்துப் பகுதியில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
- சிறிது தண்ணீரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து, தொண்டை பகுதியில் வைத்து, கரகர என்று செய்தல் வேண்டும்
- வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வலி போகும் என்று சொல்வார்கள்.
- கற்பூரவல்லி இலை சாறு எடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
- துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் புண் வராது.
- தண்ணீரைக் காய்ச்சும்போது, ஒரு பிடி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து அருந்தலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும்.
- இரவு படுக்கும்போது, பாலில் மஞ்சள்தூள், தேன், பொடித்த மிளகு போட்டு அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.
தொண்டை வலி நீங்க சில ரிப்ஸ்
Reviewed by Unknown
on
7:49:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: