Top Ad unit 728 × 90

2 மணிநேரத்தில் 4,400 பவுண்ட்ஸ் கொள்ளையடித்த இலங்கை தமிழர்கள்!

பிரித்தானியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கிசோக் தவராஜா. நடராஜா நந்தகுமார், ஜகாமித்ரா விஸ்வநாதன் ஆகிய 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் 3 பேரும் கடந்த நவம்பர் மாதம், ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெராவை பயன்படுத்தி பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

2 மணிநேரத்தில் Sutton பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து £4,400 தொகையை கொள்ளையிட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்துவந்துள்ளனர். இந்த கொள்ளையிட்ட பணத்தின் மூலம் கிசோக் தவராஜா என்பவர் அனைவரும் வியக்கம்படி ஆடம்பர திருமணம் வேறு செய்துள்ளார்.

ஏற்கனவே பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

இவ்வாறு நிலையிலேயே, இந்த திருமணத்தின் மூலம் இவர்கள் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.


இவர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்களா? என்பதை அறிய பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக, தவராஜாவின் நண்பர்களுக்கு தலா 10 மாதமும் தவராஜாவிற்கு 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


2 மணிநேரத்தில் 4,400 பவுண்ட்ஸ் கொள்ளையடித்த இலங்கை தமிழர்கள்! Reviewed by Unknown on 6:54:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.