இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த 60 வயது மூதாட்டி!
அமெரிக்காவைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிளாடெட் குக் 60. அவரது கணவர் ராஸ் குக். பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக கிறிஸ்தவ தேவாலயத்தில் சந்தித்துக் கொண்ட இவ்விருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய கிளாடெட், மருத்துவர்களின் ஆலோசனையை நாடினார். ஆனால், மருத்துவர்கள் அவரது வயதைக் காரணம் காட்டி இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். ஆனால் கிளாடெட் மனம் தளரவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி குக் தம்பதி மருத்துவர்களை அணுகினர். செயற்கை கருத்தரித்தல் நிபுணர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் தற்போது 60 வயதான கிளாடெட் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஐஷக், இஷயாக் என்று பெயரிட்டுள்ளனர்.
இரட்டைக் குழந்தை பெற்றெடுத்தவுடன் தங்களது வாழ்க்கையே மாறிவிட்டதாக கூறியுள்ள குக் தம்பதி, பிரார்த்தனையின் சக்தியால் எதையும் சாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Reviewed by Unknown
on
7:23:00 PM
Rating:
Reviewed by Unknown
on
7:23:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: