Top Ad unit 728 × 90

காதலித்து ஏமாற்றிய இன்ஸ்பெக்டர்:பெண் பொலிஸ் தற்கொலை!

தமிழகத்தில் பெண் பொலிஸ் ஒருவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காதலித்து ஏமாற்றிய விரக்தியில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை சேர்ந்த ராமு என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராமுவிற்கு அருமைநாயகம் என்ற காவலரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள அருமைநாயகம் ராமுவை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், அருமைநாயகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமு தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்திய போது அருமைநாயகம் மறுத்துள்ளார்.

பிறகு, ராமு விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்துள்ளது. தன்னை ஏமாற்றியதாகவும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் ராமு.

எனினும், அருமைநாயகம் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத வேதனையில் கடந்த 9ம் திகதி விஷம் குடித்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு சிகிச்சை பலனின்றி 10ம் திகதி இறந்துள்ளார்.

இந்நிலையில், ராமுவின் தற்கொலைக்குக் காரணமே அருமைநாயகம் தான். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய உறவினர்கள் நான்காவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திவருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
காதலித்து ஏமாற்றிய இன்ஸ்பெக்டர்:பெண் பொலிஸ் தற்கொலை! Reviewed by Unknown on 6:29:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.