Top Ad unit 728 × 90

உங்கள் காதலுக்கு ஒகே(ok) சொல்லனுமா? இதை படிங்க!

பெற்றோர்கள் நம்முடைய காதலுக்கு எதிரிகள் இல்லை, தங்களின் குழந்தைகள் எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும், சிறு குழந்தைகளாகவே பார்ப்பார்கள்.

காதலை பற்றி பெற்றோர்களிடம் பேசும் போது மிக பொறுமையாகவும், அவர்களுக்கு புரியும் வகையிலும் எடுத்துக்கூற வேண்டும்.
காதலுக்கு பெற்றோர்களின் சம்மதம் வாங்க என்ன செய்ய வெண்டும்?

பெற்றோர்களிடம் தங்களின் காதலனைப் பற்றியும், அவர் உங்களை எப்படியெல்லாம் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பதையும், இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

பெற்றோர்கள் தங்களின் காதலை கேட்டு கோபம் அடைந்தாலும், நீங்கள் பொறுமையாக இருந்து அவர்கள் சொல்வதை நன்றாக காது கொடுத்து கேட்க வேண்டும். இதனால் பெற்றோர்கள் உங்கள் காதலை பற்றி அவர்களின் மனதில் உள்ள எண்ணத்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அதற்கு ஏற்றவாறு பேச வேண்டும்.

நம்முடைய காதலைப் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் போது நாம் அதிக கோபம் அடையாமல் பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்து பேச வேண்டும். மேலும் உங்கள் சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன், நீங்கள் என்னுடைய காதலுக்கு சம்மதம் சொல்லும் வரை நான் காத்திருப்பேன் என்று மிகவும் பணிவுடன் பெற்றோர்களிடம் நடந்துக் கொள்ள வேண்டும்.

காதலை பெற்றோர்களிடம் சொல்லும் போது நாம் மிகவும் பொறுமையை கையாள வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களின் காதலுக்கு மறுப்பு சொல்லி உங்களை அடித்தாலும், உங்களிடம் பேசாமல் இருந்தாலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

நாம் பெற்றோர்களிடம் காதலை சொல்லியதும் உடனே அவர்களிடம் சம்மதத்தை எதிர்பார்த்து அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. ஏனெனில் நீங்கள் சரியான காதலனை தேர்வு செய்துள்ளீர்களா என்று அவர்கள் யோசிப்பதற்கு சிறிது நாட்கள் கொடுக்க வேண்டும்.

நீங்கள் காதல் செய்யும் காதலன் எவ்வளவு முக்கியமோ அதேபோல் உங்களின் பெற்றோர்களும் முக்கியம் என்று நீங்கள் நினைப்பதை உங்களின் பெற்றோர்களுக்கு நன்றாக உணர்த்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்களின் காதலுக்கு மறுப்பு கூறினால், நீங்கள் அதற்கு கோபம் அடைந்து பேசுவதை தவிர்த்து விட்டு, எதற்காக உங்களின் காதலுக்கு மறுப்பு கூறுகின்றார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அதை பெற்றோர்களுக்கு பொறுமையாக புரிய வையுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு பிடித்தவரை நமது பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை விட நமக்கு பெரிய பாக்கியம் வேறு எதுவும் இருக்காது.
உங்கள் காதலுக்கு ஒகே(ok) சொல்லனுமா? இதை படிங்க! Reviewed by Unknown on 7:08:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.