Top Ad unit 728 × 90

மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்த கணவர் அதிர்ச்சியில் விவாகரத்து !

மணப்பெண் என்றாலே, கைநிறைய வளையல்கள், தலைநிறைய பூ, நெற்றியினை அலங்கரிக்கும் பொட்டு மற்றும் நெத்தி சூடி என ஜொலி ஜொலிப்பார்கள்.

அந்நாளில், திருமணத்திற்கு வந்த அனைவரின் பார்வையும் மணப்பெண் மீதே இருக்கும். இப்படி மிக அழகாய் பார்த்த பெண்ணை, திருமணத்திற்கு பின்னர் மேக்கப் இல்லாமல் பார்த்த கணவர் விவாகரத்து செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னர் மேக்கப் இல்லாமல், தன் மனைவியை பார்த்த கணவர் அடையாளமே தெரியவில்லை. இவர் யார் என்று கேட்டுள்ளார்.

துபாயை சேர்ந்த புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர், கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

தன் மனைவியுடன் சென்ற அந்த நபர், நீச்சலடித்துவிட்டு வந்த அவரின் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம்.

அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மனமுடைந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரியுள்ளார். அந்த உளவியல் நிபுணர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், “அந்த பெண் திருமணத்திற்கு முன்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இனி அவர்கள் சேர்வது கடினம் என்று கூறியுள்ளார்.
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்த கணவர் அதிர்ச்சியில் விவாகரத்து ! Reviewed by Unknown on 7:18:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.