Top Ad unit 728 × 90

பெண்களே கழுத்து கருப்பாக இருக்கிறதா?இதை படியுங்க!

ஒருசிலரை பார்க்க அழகாக தெரிவார்கள். ஆனால் அவர்களுக்கு கழுத்து ஒரு நிறத்திலும் முகம் வேறு நிறத்திலும் காணப்படும்.

கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தினால் அவர்களின் முழுமையான அழகு பாதிக்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சூரியனின் கடுமையான புறஊதாக் கதிர்களின் தாக்கமாகும்.

எனவே நாம் எப்போதும் முகத்திற்கு அழகு சேர்க்கும் போது, கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தையும் கவனிக்க வேண்டும்.

கழுத்தின் இருக்கும் கருமையை போக்க என்ன செய்ய வேண்டும்?

    கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயிறு மாவு ஆகிய மூன்றையும் சமமான அளவில் எடுத்து பசும்பாலுடன் கலக்க வேண்டும். பின் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை ஆகிய பழங்களின் ஏதாவது ஒரு தோலினைக் கொண்டு கழுத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வர வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    முட்டைக்கோஸின் சாற்றை எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது சிறிதளவு தேன் கலந்து கருமை நிறம் உள்ள கழுத்தில் தேய்த்து வந்தால், கழுத்தில் கருமை நிறம் மறைந்து, பொலிவுடன் இருக்கும்.

    பாசிப்பயறு மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் ஒன்றாக சமஅளவு கலந்து, கழுத்தில் தடவி 20நிமிடங்கள் ஊறவைத்து, பின் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    பால், தேன், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுப்வெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்திக் கழுவி வந்தால், கழுத்தில் இருக்கும் கருமை நிறம் விரைவில் மறைந்து போகும்.
பெண்களே கழுத்து கருப்பாக இருக்கிறதா?இதை படியுங்க! Reviewed by Unknown on 7:46:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.