Top Ad unit 728 × 90

ஆண், பெண் ஊழியர்களுக்கு ஒரே ஊதியம்: புதிய சட்டம்!

ஜேர்மனி நாட்டில் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஒரே ஊதியம் வழங்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு ஆளும் கட்சி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் பணிக்கு செல்லும் பெண்கள் ஒரே பதவியில் இருந்தாலும் கூட சரசாரியாக ஆண்களை விட சுமார் 5 சதவிகிதம் குறைவான ஊதியத்தையே பெற்று வருகின்றனர்.

இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இருபாலினருக்கும் ஒரே ஊதியம் வழங்க ஒரு அதிரடி சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியான CDU இந்த புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.

இந்த ஆலோசனையை தொடர்ந்து நேற்று ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில், 200 ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனம் ஒரே பதவியில் இருக்கும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதியம் அளிக்கப்படுகிறது என்பதை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், 500 ஊழியர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் ஒரே பதவியில் இருக்கும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும்.

கூட்டணி கட்சியான SPD-யின் தலைவர் Thomas Oppermann என்பவர் இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ளார்.

‘மில்லியன் எண்ணிக்கையில் உள்ள பெண் ஊழியர்களுக்கு இந்த புதிய சட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்’ என புகழ்ந்துள்ளார்.

எனினும், அரசு ஆதரவு தெரிவித்துள்ள இந்த புதிய சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆண், பெண் ஊழியர்களுக்கு ஒரே ஊதியம்: புதிய சட்டம்! Reviewed by Unknown on 6:34:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.