பிறந்து 10 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற சுவிஸ் நாட்டு தம்பதிகள்!நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து 10 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற பெற்றோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரை சேர்ந்த பெற்றோருக்கு கடந்த 2013ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
மதநம்பிக்கையில் மூழ்கிய பெற்றோர் பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக தந்தைக்கு பெண் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிர் காக்கும் கருவிகளில் பொருத்தப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை தந்தை கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.
பின்னர், சுவாசம் செல்லும் குழாயினை நீக்கியதால் குழந்தை ஓக்ஸிஜன் கிடைக்காமல் பரிதாபமாக இறந்துள்ளது.
குழந்தை இறந்ததும் அதே ஆண்டு யாருக்கும் தெரியாமல் இருவரும் புதைத்துள்ளனர்.
ஆனால், இவ்விவகாரம் வெளியே தெரியவர இருவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கொலையில் முக்கிய குற்றவாளியான தந்தைக்கு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இக்கொலைக்கு உடந்தையாக இருந்த தாயாருக்கு நிபந்தனை பேரில் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எனினும், இத்தீர்ப்பு குறித்து பெற்றோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இம்மேல்முறையீடு தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Reviewed by Unknown
on
6:23:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:23:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: