மணக்கோலத்தில் தேர்வெழுதிய பொறியியல் பட்டதாரி:சுவாரஷிய தகவல்!
விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் எழுதினார்.
தமிழகம் முழுவதும் 5,451 காலியிடங்களுக்கு 301 மையங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது.
விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் தட்டச்சர் பதவிக்கு மணக்கோலத்தில் பெண் ஒருவர் தேர்வு எழுதினார்.
இவரைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், மேல் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்கிற பிரதீப்பிற்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு அகிலாண்டேஸ்வரி போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர். தேர்வு எழுதும் அகிலாண்டேஸ்வரி பி.இ.(இ சி இ) முடித்துள்ளார். இவரது கணவர் பிரதீப் என்கிற தமிழரசன் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மெப்ஸில் (MEPZ) பணியாற்றிவருகிறார்.

Reviewed by Unknown
on
5:07:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:07:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: