Top Ad unit 728 × 90

வாய் நாற்றம் குடல் புண்கள் சரியாக வேண்டுமா?இதை படியுங்க!

சீரகம்  -பத்து கிராம்
நெல்லி வற்றல்  -ஐந்து கிராம்
சுக்கு  -ஐந்து கிராம்
ஏலக்காய்த் தூள்  கால் தேக்கரண்டி
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துத் தூளாக்கி தினமும் காலை மாலை அரைதேக்கரண்டி சூரணத்தை வாயில் இட்டு மென்று சுவைத்து விழுங்கி வெந்நீர் குடித்து வர வாய் நாற்றம் குடல் புண்கள் சரியாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தீராத வயிற்று வலி
ஐமபது கிராம் சீரகத்தை நூறு மில்லி வல்லாரை சாற்றில் ஊற வைத்து காய வைத்து எடுக்க வேண்டும் இவ்வாறு வல்லாரை சாற்றில் ஊறிக் காய்ந்த சீரகத்தை மறு நாள் மறுபடியும் புதிதாகப் பிழிந்த வல்லாரை சாற்றில் ஊற வைத்து காய வைத்து எடுக்க வேண்டும் இவ்வாறு நான்கு நாட்கள் ஒவ்வொரு நாளும் புதிய சாற்றில் ஊற வைத்துக் காய வைத்து எடுத்த சீரகத்தை நாட்டுப் பசும்பாலில் ஊற வைத்து ஒருநாள் முழுவதும் காய வைத்து எடுத்து வைக்கவும்
இந்த சீரகத்தில் ஐம்பது கிராம் எடுத்து நூறு கிராம் நாட்டுப் பசு வெண்ணையை சேர்த்து அரைத்து விழுதாக எடுக்க வேண்டும்
சுக்கு . இருபது கிராம்
ஓமம் . இருபது கிராம்
சிற்றரத்தை ……. இருபது கிராம்
ஏலக்காய்த் தூள் ….. பத்து கிராம்
பனை வெல்லம் ….. இருபது கிராம்
ஆகிய ஐந்து பொருட்களையும் சேர்த்து அரைத்து சூரணமாக்கவேண்டும்

ஒரு வாணலியில் நாட்டுப் பசு வெண்ணையைப் போட்டுக் காய்ச்சி அத்துடன் அரைத்து வைத்துள்ள சீரக விழுதை போட்டுக் கிளறி ஒரு தேக்கரண்டி அரைத்து வைத்துள்ள சூரணத்தைப் போட்டுக் கிளறி இலேகியப் பதம் வந்தவுடன் இறக்கி
தினமும் காலை இரவு உணவுக்குப் பின் அரை தேக்கரண்டி லேகியத்தை வாயில் இட்டு மென்று சுவைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர பதினைந்து நாட்களில் தீராத வயிற்று வலி முழுமையாகக் குணமாகும்.
குணமான பின் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்
இது ஒரு காய கற்ப மருந்து ஆகும்.
வாய் நாற்றம் குடல் புண்கள் சரியாக வேண்டுமா?இதை படியுங்க! Reviewed by Unknown on 4:53:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.