Top Ad unit 728 × 90

இரவில் வாழைப் பழம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?எந் நேரத்தில் சாப்டலாம்!

பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் எதுவென்ற சந்தேகம் இருக்கும். பெரும்பாலானோர் இரவில் தான் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் இரவில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி மனதில் இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் கேட்டால், சிலர் அது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

பழங்களில் வாழைப்பழம் விலைமலிவில் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் கிடைக்கும் பழமாகும். இத்தகைய வாழைப்பழத்தை இரவில் ஒருவர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தூக்கம் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனினை உற்பத்தி செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். இதற்கு மெலடோனின் அளவை அதிகரிக்கும் ட்ரிப்டோபேன் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் பொட்டாசியம் நம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தேவையான அவசியமான சத்தாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 4700 மிகி பொட்டாசியத்தை எடுக்க வேண்டும். இந்த பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளது.

சர்க்கரைக்கு சிறந்த மாற்று பலருக்கும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் இனிப்புக்களை சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட, இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.

தசைப்பிடிப்புக்கள் குறையும் இரவில் படுக்கும் போது உங்களுக்கு கால் பிடிப்புக்கள் ஏற்பட்டால், வாழைப்பழத்தை சாப்பிட்டு பின் தூங்குங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை ஊக்குவித்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

செரிமானம் வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. எனவே இரவில் உணவு உட்கொண்ட பின் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உண்ட உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
இரவில் வாழைப் பழம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?எந் நேரத்தில் சாப்டலாம்! Reviewed by Unknown on 5:51:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.