Top Ad unit 728 × 90

சொந்த வீட்டில் திருடிய நபர்:குளம்பிபோன போலீஸார்!

நெல்லை மாவட்டத்தில் சொந்த வீட்டில் நகை, பணத்தை திருடிய பில்டரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ஆர்.எஸ்.காலனி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவரது மனைவி சாந்தி. இசக்கிபாண்டி, பில்டராக உள்ளார். சாந்தியின் அக்காள் ராணி. இவரது கணவர் செல்வராஜ். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கேரளாவில் எஸ்டேட்டும் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு செல்வராஜ், இசக்கிபாண்டியிடம் 12 லட்சம் ரூபாயை கொடுத்தார். பிறகு அவர் கேரளாவுக்கு சென்றார்.

அந்த பணத்தை பாதுகாப்பாக பீரோவில் வைத்திருந்தார் இசக்கிபாண்டி. தீபாவளியையொட்டி வி.கே.புரத்தில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார் இசக்கிபாண்டி. இதன்பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவுகள் திறந்து இருந்தன. பீரோவில் இருந்த பணமும், இரண்டரை சவரன் நகையும் திருட்டுப் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கிபாண்டி, நெஞ்சு வலிப்பதாக கூறி வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். திருட்டு சம்பவம் தொடர்பாக சாந்தி, அம்பாசமுத்திரம் போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார், இசக்கிபாண்டியனின் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இந்த சமயத்தில் வழக்கின் திடீர் திருப்பம் ஏற்பட்டது.



இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இசக்கிபாண்டிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சாந்தி புகார் கொடுத்ததாக முதலில் கருதினோம். இந்த திருட்டு சம்பவத்தில் இசக்கிபாண்டி வீட்டில் எந்த பூட்டுகளும் உடைக்கப்படவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்குத் தொடர்பாக இசக்கிபாண்டியின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இசக்கிபாண்டியிடம் தனியாக விசாரித்தோம். அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கைரேகையிலும் இசக்கிபாண்டியனின் ரேகை இருந்தது தெரியவந்தது.

செல்வராஜ் கொடுத்த 12 லட்சம் ரூபாயில் 3 லட்சம் ரூபாயை கட்டட பொருட்களை வாங்க செலவழித்துள்ளார் இசக்கிபாண்டி. மீதமுள்ள 9 லட்சம் ரூபாயை அவரது வாழை தோட்டத்தில் சாக்கு மூட்டையில் வைத்து புதைத்து வைத்திருப்பதாக இசக்கிபாண்டி தெரிவித்தார். அவர் சொன்ன இடத்திலிருந்து 9 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளோம். பணத்தை மட்டும் திருடாமல் மனைவியின் இரண்டரை சவரன் நகையையும் திருடியுள்ளார். இதையடுத்து இசக்கிபாண்டியை கைது செய்துள்ளோம். செல்வராஜிடம் பணம் திருட்டு போனதாக சொல்லி அவரை ஏமாற்றவே இசக்கிபாண்டி திருடியதாக தெரியவந்துள்ளது" என்றார்.
சொந்த வீட்டில் திருடிய நபர்:குளம்பிபோன போலீஸார்! Reviewed by Unknown on 2:41:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.