பெண்களே!ஆண்களை கவர்ந்து ஈர்க்கும் கவர்ச்சிகரமான ரகசியங்கள்:இன்றைக்கே ஆரம்பிங்க...
பெண்களை பார்த்தவுடன் காதலில் விழும் சில ஆண்கள் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த ஆண்கள் எதிர்ப்பார்க்கும் உடற்தோற்றம் அந்த பெண்ணுக்கு இருப்பதால் தான்.
மேலும், பெண்களிடம் இருக்கும் சில கவர்ச்சிகரமான ரகசியங்கள் தான் ஆண்களை பார்த்ததும் காதலில் விழச் செய்கிறது.
ஏனெனில் பெண்களின் ஒருசில முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையதை வெளிப்படுத்துகிறது.
எனவே ஆண்களைக் கவரும் பெண்களின் முக்கிய ரகசியங்கள் குறித்து அறிவியல் கூறுவதை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
- பெண்களின் விலா எலும்புகளுக்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி சிறியதாகவும், பரந்த இடுப்பையும் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகமாக கவருகின்றார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
- ஆண்கள், அழகிய இடுப்பின் வளைவுகளைக் கொண்ட பெண்களால் எளிதில் கவரப்படுவதற்கு, அந்தப் பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அந்த மாதிரியான பெண்களால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
- அமைதியாக இருக்கும் ஆண்கள் அதிகமாக பேசும் பெண்களை விரும்புவார்கள். ஏனெனில் உயிரியல் ரீதியாக உரக்க குரலில் பேசும் பெண்களின் இளமை என்பது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சாதகமாக இருப்பதை வெளிக்காட்டுகிறது.
- நீளம் குறைவான கூந்தலை உடைய பெண்களை விட, நீளம் அதிகமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். ஏனெனில் நீளமான பட்டுப் போன்ற கூந்தலானது அந்த பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிப்படுத்துகிறது.
- பெண்களின் புன்னகை எப்போதும் அவர்களின் அழகை அதிகமாக வெளிப்படுத்தும். எனவே எப்போதும் புன்னகை முகத்துடன், வெண்மையான பற்களை கொண்டுள்ள பெண்கள், ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
- ஆண்கள் மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் இருக்கும் பெண்களின் மீது அதிக காதல் வயப்படுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
- பெண்களின் ஆடை கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு நிறமானது அவர்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவுகிறது. எனவே மானுடவியல் ஆய்வுகளின் படி, பெண்கள் அணியும் சிவப்பு நிற ஆடைகள் ஆண்களை எளிதில் கவருகிறது என்பது மிகவும் உண்மையாகும்.
பெண்களே!ஆண்களை கவர்ந்து ஈர்க்கும் கவர்ச்சிகரமான ரகசியங்கள்:இன்றைக்கே ஆரம்பிங்க...
Reviewed by Unknown
on
5:46:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:46:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: