Top Ad unit 728 × 90

நீரிழிவு நோயால் சுன்னாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர்

 நீரிழிவு நோயின் தாக்கத்தால் மன விரக்தியுற்ற இளம் குடும்பஸ்தரொருவர்நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று புதன்கிழமை சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.

யாழ்.சுன்னாகம் கடவைப் புலம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்மயூரன் (வயது-32) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.சுன்னாகம் கடவைப் புலம் வீதியைச் சொந்தவிடமாகக் கொண்ட குறித்த இளைஞர்விறகு விற்பனை நிலையமொன்றின் உரிமையாளராவார்.

கடந்த நான்கு வருடங்களுக்குமுன்னர் திருமணம் செய்துள்ள இவருக்கு மூன்று வயதில் ஆண் குழந்தையொன்றுமுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன் மருத்துவ பரிசோதனையின் போது இவருக்கு நீரிழிவு,இரத்த அழுத்தம் ஆகிய நோய்களிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்துத் தனக்குஇளம் வயதிலேயே நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பது குறித்து மனமுடைந்த நிலையில்வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று வழமை போன்று மாதாந்தக் கிளினிக்குக்காகவைத்தியசாலைக்குச் சென்ற குறித்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்டபரிசோதனையில் நீரிழிவு நோயின் தாக்கம் முன்னரை விட அதிகரித்த நிலையிலிருந்தமைகண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த குடும்பஸ்தர்முன்பிருந்ததை விட மிக மனவிரக்தியுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டிலுள்ள அனைவரும் உறக்கத்திற்குச் சென்ற பின் வீட்டிற்கு முன்பாகவுள்ளஆட்டுக்கொட்டிலில் தனது கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளைமேற்கொண்டதுடன் மல்லாகம் நீதவான் இன்று சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகை தந்துபார்வையிட்டுமுள்ளார்.

இதனையடுத்துத் தற்கொலை செய்து கொண்ட இளம்குடும்பஸ்தரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுஅங்குள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் சுன்னாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர் Reviewed by Unknown on 6:03:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.