Top Ad unit 728 × 90

இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்த யாழ்ப்பாணத்தில்தனியார் காணிகள் கொள்வனவு!

போரின் காரணமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் குடியமர்த்ததனியார் காணிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நலன்புரி மையங்களில் 971 குடும்பங்கள் தங்கியுள்ளனஅவற்றில் 682 குடும்பங்களுக்கு சொந்தக்காணிகள் இல்லை.

இந்த குடும்பங்களில் 220 குடும்பங்களை குடியேற்ற காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.எனினும் 462 குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளது.

இந்தநிலையில் தனியார் காணிகளை கொள்வனவு செய்து அவற்றில் 20 பேர்ச்சஸ் என்றஅளவில் காணியற்றவர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 88 மில்லியன் ரூபாய்கள் தேவை என்ற வகையில் மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்த யாழ்ப்பாணத்தில்தனியார் காணிகள் கொள்வனவு! Reviewed by Unknown on 5:39:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.