தன் உயரத்தை அதிகரிக்க ஆபரேஷன் செய்த இளைஞன்:மரண படுக்கையில்!
தெலுங்கானா மாநிலத்தில் உயரம் அதிகமாக வேண்டும் என அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தற்போது படுத்த படுக்கையாகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நிகில் ரெட்டி. இவர் தனது உயரத்தினை இருப்பதை விட இரண்டு அங்குலம் அதிகரிக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
ஆனால், நிகில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
இதற்கு காரணம் தவறான அறுவை சிகிச்சை செய்துள்ளது தான் என உள்ளூர் ஊடகங்கள் குற்றம் சாட்டிய நிலையில், இது குறித்து தெலுங்கானா மாநில மெடிக்கல் கவுன்சில் தானாக முன் வந்து விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணையில் நிகில் ரெட்டியின் இந்த நிலைக்கு மருத்துவமனையும், தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும் தான் காரணம் என்பது உறுதிபட தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்ததுடன் நிகில் ரெட்டியின் உடல் நிலை சரியாகும் வரை, அவரின் முழு சிகிச்சை செலவையும் குளோபல் மருத்துவமனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மெடிக்கல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Reviewed by Unknown
on
6:05:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:05:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: