Top Ad unit 728 × 90

துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு:வாழ்க தமிழ்!

உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும்.

துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. துபாய் நகருக்கு உலக நாடுகளில் இருந்துவரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

துபாய் நகருக்கு கடந்த செப்டம்பர் மாதம் வந்த பயணிகளின் எண்ணிக்கை 70 லட்சத்து 94 ஆயிரத்து 738 பேர் ஆகும். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 6 லட்சம் பேர் அதிகம்.

அமீரகம் முழுவதும் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 20 சதவீதம் பேர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். இவர்களைக் காண்பதற்காக உறவினர்கள் துபாய் சென்று வருகின்றனர்.

இதனால், துபாய் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் முனையம் 3ல் இருந்து எமிரேட்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் தமிழ் பயணிகளை கவரும் வகையில், அவர்களுக்கான சேவைகள் பற்றிய விபரங்களை தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்த அறிவிப்பில் நுழைவு வாயில் எண்ணை குறிப்பிட்டு பயணிகள் விமானத்தில் ஏறும்படியும், பயண டிக்கெட்டை காட்டுவதற்கு தயாராக வைத்துக் கொள்ளவும், பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எமிரேட்ஸ் விமான சேவையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி என்பது போன்ற அறிவிப்புகள் தமிழில் ஒலிபரப்பாகின்றன.

ஏற்கனவே அந்த நிறுவனம் அரபி, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட்டு வந்த, நிலையில், தற்பொழுது தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு:வாழ்க தமிழ்! Reviewed by Unknown on 6:08:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.