Top Ad unit 728 × 90

அகதிகளுக்கு எதிராக ஜேர்மன் குடிமக்கள் அதிரடி நடவடிக்கை:அதிர்ச்சியில் அரசு!

ஜேர்மனி நாட்டில் அகதிகள் மற்றும் குடிமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உயரமான சுவர் எழுப்பப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் முனிச் நகருக்கு அருகில் உள்ள Neuperlach Sud என்ற நகரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே நகரில் உள்ள முகாமில் ஆதரவற்ற குழந்தைகள் உள்பட 160 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அகதிகளால் தங்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படக்கூடாது என அந்நகர குடிமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அகதிகள் முகாம் மற்றும் குடிமக்களின் குடியிருப்பிற்கு மத்தியில் உயரமான சுவர் எழுப்ப வேண்டும் என கடந்த யூன் மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை தொடர்ந்து இருதரப்பினருக்கும் மத்தியில் சுவர் எழுப்பிக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தற்போது சுவர் எழுப்பும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 13.1 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுவருக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அகதிகளுக்கு எதிராக ஜேர்மன் குடிமக்கள் அதிரடி நடவடிக்கை:அதிர்ச்சியில் அரசு! Reviewed by Unknown on 6:18:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.