தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள்:அதிர்ச்சி தகவல்
ஈராக்கின் மொசூல் நகரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்துள்ளதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில் அந்த அமைப்பின் பிடியில் சிக்கியிருந்த முக்கிய நகரை கைப்பற்றும் நோக்கில் ஈராக் ராணுவமும் முன்னேறி வருகின்றது.
இதனிடையே மொசூல் நகரை ஐ.எஸ் பிடியில் இருந்து கைப்பற்றிய ராணுவத்தினர் குறித்த நகரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மொசூல் நகரில் வேளான் கல்லூரி ஒன்றின் மைதானம் அருகே புதைக்கப்பட்ட நிலையில் உடல்களை மீட்டுள்ளனர். அதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் கூட்டமாக புதைக்கப்பட்டிருந்ததை ராணுவம் உறுதி செய்துள்ளது.
டைக்ரிஸ் நதி ஓரத்தில் மொசூல் நகரின் தென் பகுதியில் இந்த உடல்களை ராணுவம் கைப்பற்றியுள்ளன. இது ஐ.எஸ் அமைப்பினர் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட நரவேட்டை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று ராணுவ பிரதிநிதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அகதிகள் முகமை அதிகாரிகளின் கருத்துப்படி, அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை பயமுறுத்தி, 9 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் குறித்த அமைப்பில் சேர்த்துவிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மறுப்பு தெரிவித்த குடும்பத்தினரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலை துண்டித்து புதைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரித்தானியா ஆதரவு மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துகள்படி, இதுவரை மொசூல் நகரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிரியாவைச் சேர்ந்த 480 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 300 சிறுவர்கள் படையினரும் அதில் அடங்கும் என தெரிவிக்கின்றனர்.

Reviewed by Unknown
on
5:53:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:53:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: