Top Ad unit 728 × 90

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை:நால்வர் அதிரடி கைது!

வவுனியா மருக்காரம்பளை வீதி பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்  இன்று (22.11.2016) காலை சடலமாக மீட்கப்பட்டடுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பத்தியார்மகிழங்குளத்தில் வசித்து வரும் ஜேர்மனி நாட்டின் குடியிருமை பெற்ற விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சம்பவ நடந்த இல்லத்தற்கு அயல் வீட்டில் விருந்துபாசாரம் நடந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமையினையடுத்து அவ்விடத்திற்கு நேற்று இரவு விரைந்த பொலிஸார் அவர்களிடம் வினாவியதனையடுத்து விருந்துபாசாரம் தான் நடைபெறுகின்றது. இங்கு வேறு பிரச்சனையில்லை என பொலிஸாரிடம் கூறியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தினை விட்டு சென்றுள்ளனர்.

எனினும் குறித்த நபர் தான் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அவரை நேற்று விருந்துபாசரத்தில் இருந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற விசாரணையின் பெயரில் விருந்துபாசாரத்தில் பங்குபற்றியிருந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் அனைவரும் ஜேர்மனியில் வசித்து வருகின்றனர் எனவும் மணல் இறக்குவதற்காக இன்று காலை வந்த டிப்பர் சாரதியே வீட்டின் உரிமையாளர் வாசலில் சடலமாக இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் கொலை செய்யப்பட்ட விக்கிரமரட்ன குணசிறி { வயது 59) முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் மயுரன் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை:நால்வர் அதிரடி கைது! Reviewed by Unknown on 10:18:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.