Top Ad unit 728 × 90

கிளிநொச்சி மாவட்டம் மழையின் பிடியில்!பரீட்சைக்கு செல்வதில் மாணவர்கள் பெரும் சிரமம்..

கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெரும்பாலான வீதிகள் வாய்க்கால் போன்று காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் சீருடைகள் நணைந்த நிலையிலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கடந்த நான்கு தினங்கள் பெய்து வரும் மழையினால் சிறுகுளங்கள் வான்பாய்வதால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

வீதிகளில் வெள்ளம் குறுக்கறுத்து பாய்வதால் முருகண்டி, இந்துபுரம், ஆனந்தநகர் மேற்கு, உருத்திரபுரம், அக்கராயன், மற்றும் தட்டுவன் கொட்டி ஆகிய கிராமங்களின் பாதைகள் போக்குவரத்துச் செய்ய முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கருப்பிணித் தாய்மார்கள், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், போன்றவர்களை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயனின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

அத்துடன் நேற்று செவ்வாய்க் கிழமை நள்ளிரவு முதல் மருத்துவர் கார்த்திகேயனின் உருத்திரபுரம், சிவன்சோலை கிராமங்களில் வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் நின்று அவசர கால உடனடி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சியில் உருத்திரபுரம், பொன்னகர், இரத்தினபுரம், பரந்தன் சிவபுரம், பண்ணங்கண்டி, மலையாளபுரம் இந்துபுரம், ஆனந்தபுரம் மேற்கு என பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

பல வீதிகளில் வெள்ளம் ஊடறுத்து பாய்கிறது. இதனால் சில வீதிகளில் முற்றாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை வெள்ளத்தினால் இடம்பெயரும் நிலைமை மக்களுக்கு ஏற்படவில்லை. இருந்தும் தற்போது பெய்கின்ற மழை தொடருமானால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டம் மழையின் பிடியில்!பரீட்சைக்கு செல்வதில் மாணவர்கள் பெரும் சிரமம்.. Reviewed by Unknown on 4:22:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.