Top Ad unit 728 × 90

விடுதலைப்புலிகளுடன் இருந்த தொடர்பை ஒப்புக்கொண்ட இளைஞன்!

தாம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புக்கொண்டிருக்கவில்லை என்று கூறிய கூற்று பொய்யானது என்பதை சண் சீ கப்பலின் மூலம் கனடாவுக்கு சென்ற இலங்கை அகதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டு தமது அரசியல் அடைக்கல கோரிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதன் காரணமாகவே இந்த பொய்யைக்கூறியதாக இலங்கை அகதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

சண் சீ கப்பலின் மூலம் 492 இலங்கையர்களை கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு அழைத்துச்சென்ற நால்வர் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த 492பேரில் ஒருவரான சசிக்குமார் கணபதிப்பிள்ளை என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

ஏற்கனவே கனேடிய எல்லை சேவை முகவரக அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தின்போது, தாம்,விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்ததாக சாட்சி கூறியுள்ளார்.

கனடாவில் தமக்கு அரசியல் அடைக்கல கோரிக்கைக்கு இந்த விடயம் பாதகமாக அமைந்துவிடும் என்பதன்காரணமாகவே தாம் அவ்வாறு கூறியதாக சாட்சி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அறங்கூறுநர்களிடம் தமது சாட்சியத்தை அளித்த, சசிக்குமார்,தாம் 7 வருட அடிப்படையில் தாம் விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கையை கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

இதன்போது தமக்கு கொமாண்டோ பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன் தாம் குண்டுகளை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியான, மூன்று வருடக்காலப்பகுதியில் போராளிகளுக்கு குண்டுகளை தயாரிப்பது குறித்து கற்பித்தலில் ஈடுபட்டதாகவும் சாட்சி கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளுடன் இருந்த தொடர்பை ஒப்புக்கொண்ட இளைஞன்! Reviewed by Unknown on 4:11:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.