Top Ad unit 728 × 90

மீன் குழம்பால் குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் சேதம்:பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மீன் குழம்பு சாப்பிட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். நேற்று விடுமுறை என்பதால் பெருமாள் தனது குடும்பத்தாருடன் வீட்டில் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட பெருமாள் உள்ளிட்ட 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெருமாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீன் குழம்பால் குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் சேதம்:பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! Reviewed by Unknown on 4:06:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.