Top Ad unit 728 × 90

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை கற்பழித்தகொடூரன்:அதிரடி கைது!

பிரித்தானியா நாட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை இரக்கமின்றி கற்பழித்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள East Yorks என்ற நகரில் தான் இந்த கொடூரச்செயல் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் Michael Greenhalgh என்ற 40 வயதான நபர் ஒருவர் தனது காதலியுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தான் தங்கி வந்துள்ளனர்.

மேலும், நபரின் காதலி அண்மையில் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இரவு 11.30 மணியளவில் காதலிக்கு லேசாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆடைகளை நீக்கிவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த நபர் தனது காதலியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், தான் பிரசவ வலியால் இருப்பதாகவும், உறவுக்கொள்ள முடியாது என பெண் மறுத்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த நபர் காதலியின் நிலையையும் எண்ணாமல் பலவந்தமாக உறவுக்கொண்டுள்ளார். காதலி பலமாக போராடியும் அவரை தடுக்கம் முடியவில்லை.

இச்சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரத்திற்கு பிறகு காதலிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், பிரசவ நேரத்திலும் தன்னிடம் மோசமாக நடந்துக்கொண்ட நபரிடம் இனியும் வாழ முடியாது என தீர்மானித்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், தனது விருப்பம் இல்லாமல், பிரசவ வலியில் இருந்த தன்னை பலவந்தமாக கற்பழித்த காதலன் மீது வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை கற்பழித்தகொடூரன்:அதிரடி கைது! Reviewed by Unknown on 5:15:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.